தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்து தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால் ஒரே கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. அதன்காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல் உழவர் சந்தையில் நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, பவித்திரம், எருமப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.