புதுடெல்லி: வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும் இணையதளத்தை (ECINET) தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த செயலில் தற்போது இறுதி மற்றும் சோதனை கட்டத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பிஹார் தேர்தலுக்கு முன் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.