சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிச.7,8 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் இன்றும், நாளையும் (டிச.6,7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 310 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து 80, மாதவரத்தில் இருந்து 30 என 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.