எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லுாரி சார்பில் வாஸ்போ மாநில அளவிலான கல்லூரிகள், பள்ளி மாணவிகளுக்கான செஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகள் பிரிவில் 150 பேரும், பள்ளிகள் பிரிவில் 300 பேரும் பங்கேற்றனர். கல்லூரிகள் பிரிவில் நாகர்கோவிலை சேர்ந்த ரெபேக்கா ஜெசுமரியன் (ஹோலி கிராஸ்) சாம்பியன் பட்டம் வென்றார். பள்ளி மாணவிகளுக்கான 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கீர்த்தி ஸ்ரீ ரெட்டியும் (வேலம்மாள் மெட்ரிகு ரிகு லேசன்), 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தீபிகாவும் (வேலம்மாள் வித்யாலயா) முதல் இடத்தை பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பரிசுகளை வழங்கினார். செஸ் குருகுல் அமைப்பின் சிஎஃப்ஓ ஆர்த்தி ராமசாமி, வைஷ்ணவா கல்லூரி முதல்வர் அர்ச்சனா, உடற்கல்வி இயக்குநர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.