நியூயார்க்: அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்புற திட்டமிடல் பிரிவில் பிஎச்டி படித்து வந்தவர் ரஞ்சனி னிவாசன் (37). இவர் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதன் காரணமாக, எப்-1 மாணவர் விசா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவி ரஞ்சனி அவசர அவசரமாக சுயமாக தன்னை நாடு கடத்திக் கொண்டு கனடாவுக்கு சென்று விட்டார். இந்நிலையில், தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து ரஞ்சனி முதல் முறையாக அளித்துள்ள பேட்டியில், ‘‘கடந்த 5ம் தேதி எனது மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது.
இதற்கு எந்த விளக்கமும் எனக்கு தரப்படவில்லை. அதைத் தொடர்ந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் எனது மாணவர் சேர்க்கையை கொலம்பியா பல்கலைக்கழகமும் ரத்து செய்தது. இதனால் மிகுந்த நெருக்கடியை சந்திக்கத் தொடங்கினேன். குடியேற்றத்துறை அதிகாரிகள் 3 முறை இரவில் வந்து எனது அறை கதை தட்டினர். நிலைமை மோசமடைந்து ஆபத்தாகி விட்டதால் உடனடியாக முடிவெடுத்தேன். இப்போது எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எனது பேச்சுரிமையை பயன்படுத்தியதை தவிர நான் வேறெந்த தவறும் செய்யவில்லை’’ என கூறி உள்ளார்.
The post விசா ரத்துக்கு பின் நடந்தது என்ன? அமெரிக்காவிலிருந்து சுயமாக நாடு கடத்திக் கொண்டது ஏன்? இந்திய பிஎச்டி மாணவி விளக்கம் appeared first on Dinakaran.