அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கான முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் வசூல் மட்டும் ரூ.10 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் நாளை (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்துக்கான முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் ரூ.10 கோடியை எட்டிவிட்டது.