நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் அன்று வெளியாக இருந்து தள்ளிவைக்கப்பட்ட இப்படம், வரும் 6-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரெய்லரின் பிடிஎஸ் (Behind the scenes) வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு யு /எ சான்றிதழ் வழங்கியுள்ளது.