சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்காவின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.
ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது.