நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் கார் ரேஸில் அவரது அணி கலந்துகொள்கிறது. இதற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளார்.