சென்னை: பொங்கலுக்கு வெளியூர் சென்ற பலரும் விமானத்தில் சென்னை திரும்புவதால், விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காத நிலையில், பலரும் விமான பயணத்துக்கு முன்பதிவு செய்வதால், விமான கட்டணம் அதிகரித்துள்ளது. மதுரை – சென்னை ரூ.10,046 முதல் ரூ.17,991, திருச்சி – சென்னை ரூ.6,049 முதல் ரூ.11,089, கோவை – சென்னை ரூ.5,552 முதல் ரூ.11,089, தூத்துக்குடி – சென்னை ரூ.10,750 முதல் ரூ.17,365, சேலம் – சென்னை ரூ.10,441 ஆக கட்டணம் உள்ளது.