நாகர்கோவில்: இந்திய விமானப்படையின் கிழக்கு விமானப்படை தலைமை தளபதி ஏர் மார்ஷல் சூரத் சிங் இன்று (6ம் தேதி) கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி ஹெலிபேட் தளத்திற்கு ஹெலிகாப்டரில் பகல் 1.30 மணிக்கு வரும் அவர் கன்னியாகுமரி பகுதியை குடும்பத்தினருடன் சுற்றி பார்க்கிறார். படகில் சென்று சுவாமி விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார்.
The post விமானப்படை தலைமை தளபதி இன்று குமரி வருகை appeared first on Dinakaran.