புதுடெல்லி: அமெரிக்க முதலீட்டாளரும், நிதி விமர்சகருமான ஜிம் ரோஜர்ஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உலகின் பாதுகாப்பான முதலீட்டுக்கான தளமாக மாற இந்தியா தயாராகி வருகிறது. வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சி சிறப்பாக செயல்படக்கூடிய திறன் இந்தியாவிடம் உள்ளது. பல தசாப்தங்களாக முதலீட்டு உலகில் இருக்கிறேன். வாழ்க்கையில் முதல் முறையாக டெல்லி மக்கள் பொருளாதாரத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்வதை பார்க்கிறேன்.
இந்தியா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. டெல்லியில் உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டு அதனை செய்ய முயற்சிக்கிறார்கள். அது இந்தியாவுக்கும் உலகுக்கும் அற்புதமாக இருக்கும். இந்தியா உண்மையில் முழு உலகத்துடனும் திறந்த வர்த்தகத்தில் ஈடுபட முடிந்தால், அதனால் நாட்டின் எதிர்காலம் நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பானதாக இருக்கும்.