வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார், சென்னையில் காலமானார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘பைரவ தீபம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்திலும் பிரபலமானார். தமிழ் சினிமாவிலும் நடித்துள்ள இவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சமீபத்தில் காயமடைந்தார்.