சென்னை: ப்ளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் கால்பந்தாட்ட வீரர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது 1.4 பில்லியன் டாலர்கள் என தகவல்.
40 வயதான ரொனால்டோவின் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அல்-நஸர் கிளப் அணி உடனான அவரது ஒப்பந்தம். கடந்த ஜூன் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர் என தகவல். 2023 வரை சம்பளம் மூலம் சுமார் 550 மில்லியன் டாலர்களை அவர் ஈட்டியுள்ளார். நைக் நிறுவனத்தின் 10 ஆண்டுகால ஒப்பந்தம் மூலம் 18 மில்லியன் டாலர்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து 175 மில்லியன் டாலர்களையும் அவர் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பர்க் தெரிவித்துள்ளது.