சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51.செ.மீ., நெம்மேலியில் 46 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் . மழை நின்றதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். விழுப்புரத்தில் நிவாரண பணி மேற்கொள்ள கூடுதல் தலைமை செயலர் மணிவாசகம் தலைமையில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.