தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.
ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.