‘சில வருடங்களுக்கு வருடத்துக்கு முன்புதானே வீட்டைக் கட்டி முடித்துக் கிரகப் பிரவேசம் செய்தோம். அதற்குள் இப்படியா?’ என்று வருத்தப்பட்டார் நண்பர். என்ன ஆச்சு என்றபோது வீட்டின் மேற்பகுதியைச் சுட்டிக் காட்டினார். ஆங்காங்கே ஈரம் பரவத் தொடங்கியிருந்தது. இது எதனால் என்று மண்டையை உடைத்துக்கொண்டார். கட்டிடத்தில் நீர்க் கசிவு என்று சொல்லும்போது அது பெரும்பாலும் மேல் தளத்துக் கசிவாகவோ, கழிப்பறைகளில் ஏற்படும் கசிவாகவோ இருக்க வாய்ப்பு மிக அதிகம்.
இது போன்ற நீர்க் கசிவுகளைத் தொடர அனுமதித்தால் சுவரின் வண்ணம் பாழ்படும். மின் கசிவு ஏற்படலாம். எனவே, தோற்றம் என்கிற கோணத்தில் மட்டுமல்லாமல் பாதுகாப்பு என்ற கோணத்திலும் நீர்க் கசிவுகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். இதை உணர்ந்த நண்பர் கசிவை நீக்க ப்ளம்பரை அழைத்தார்.