கோவில்பட்டி: "எங்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயமே போதும். வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்" என எட்டயபுரத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
எட்டயபுரம் வட்டம் வெம்பூரில் சுமார் 2,700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. 2,700 ஏக்கர் என்றால், வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி ஆகிய கிராமங்களின் மானாவாரி நிலங்கள் கையகப்படுத்தப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனிபிரிவு ஏற்படுத்தப்பட்டு, சுமார் 11 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு சிப்காட் தொழில் பூங்காவுக்குரிய நிலங்களை பார்வையிடும் பணிகள் நடந்து வருகின்றன.