சென்னை:“வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் திமுக அரசிடம் பட்டியலின மக்கள் நீதியை எதிர்பார்ப்பது நடவாத ஒன்று. இந்த வழக்கை விசாரிக்கும் உரிமையை தமிழக காவல் துறை இழந்து விட்டது. வழக்கு உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மேலும், “பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும் சமூக நீதி இதுதானா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி குடிநீர் தேக்க தொட்டியில், சமூக விரோதிகள் மனிதக்கழிவை கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தின.