சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனுதாரர் தரப்பு மார்ச் 10-ம் தேதிக்குள் பதில் அளி்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பரில் புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.