கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்ட விபத்தில் 35 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாலையில் வேப்பூர் மேம்பாலத்தில் ஆம்னி பேருந்தை நிறுத்தியபோது, பின்னால் வந்த 2 பேருந்துகள் அடுத்தடுத்து மோதியது. விபத்தில் காயம் அடைந்த 3 பேருந்தில் இருந்தவர்களை மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 3 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் சரக்கு லாரி பழுதாகி நின்றுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்துகள் மூன்று ஒன்றன் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்துகளில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆம்னி பேருந்தில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணி நீண்ட காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாலேயே அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விபத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது. 3 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
The post வேப்பூர் மேம்பாலத்தில் 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து: 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.