மதுரை: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மதுரையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என மதுரை மாநகர மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை செல்லூர் வைத்தியநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24வது 2 நாள் மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், "கடுமையான விலைவாசியால் மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இல்லை. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி யார் கைகளுக்கு போகிறது என்பதை நாம் உணர வேண்டும். கார்ப்பரேட் மற்றும் பெரும் செல்வந்தர்களின் கைகளில் இன்றைக்கு உற்பத்தி போய்க்கொண்டிருக்கிறது.