சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும், மார்ச் 24 முதல் ஏப்.30-ம் தேதி வரை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழக அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: