மதுரை: வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுத்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. வைகையில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சிறப்புக் குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை நிதி அசுத்தமடைந்திருப்பது ஆய்வு மூலம் உறுதியாகி உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நதியை அசுத்தப்படுத்துவோரிடம் அபராதம் வசூலித்து, அதன் மூலம் ஆற்றை மறுசீரமைக்க வேண்டும் நீதிமன்றம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
The post வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.