அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 35-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது.