ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி இன்று அதிகாலை கார் ஒன்று சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. பென்னலூர் பகுதியில் வந்தபோது சாலையில் குதிரை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதில் காரில் வந்தவரின் கவனம் சிதறியதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி நின்றது. அந்த நேரத்தில் பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால் புகைமண்டலம்போல் இருந்தது. இதனால் விபத்தில் சிக்கி நின்ற கார் தெரியாமல், பின்னால் வந்த 2 தனியார் தொழிற்சாலை பேருந்துகள், காலி மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி என அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் காரின் பின் பகுதி நொறுங்கின.
இந்த விபத்தில் காரில் வந்தவர்கள், தனியார் தொழிற்சாலை பேருந்தில் பயணம் செய்தவர்கள் என 5க்கும் மேற்பட் டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
The post ஸ்ரீபெரும்புதூரில் இன்று அதிகாலை பனிமூட்டம்: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியதில் 5 பேர் காயம் appeared first on Dinakaran.