ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகமுக்கியத் தலமாக இந்த கோயில் போற்றப்படுகிறது. முக்கிய விஷேச நாட்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வர். கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று திருக்கல்யாணம்.
இந்தாண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 11ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொடியேற்றம் நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.