சமீப வாரங்களாக சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் இதுதொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்த வைரஸ் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.