சென்னை: ஹோலி பண்டிகை முன்னிட்டு சொந்த நகரங்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 8, 12 (சனிக்கிழமை, புதன்) ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு (வாரம் இருமுறை சிறப்பு ரயில்-06077) புறப்பட்டு, 3-வது நாள் (முறையே திங்கள், வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் சந்த்ரகாச்சிக்கு சென்றடையும்.