பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள் பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்

பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்

அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது சமூக ஊடகங்கள் வழியே மக்கள் இடையே பரப்பப்பட்டது ஒரு மோசமான சூழலை உண்டாக்கியது. இரண்டுக்குப் பின்னாலும் இருப்பது அப்பட்டமான சாதிவெறி என்பது தமிழ்நாட்டுக்கு மேலும் இரு தலைகுனிவுகள்தான். புதுக்கோட்டை மாவட்டம், ...
ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா

ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிவிட முடியும் என நரேந்திர மோடி நம்பிக்கையுடன் உள்ளார். அவ்வாறு மீண்டும் பிரதமரானால், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைப் ...
கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை

கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை

இந்தியாவை பாஜக எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது, அதன் தொலைநோக்குப் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இரு முக்கியக் காரணங்களுக்காக பாஜகவின் அறிக்கை ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது. முதலாவதாக, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஆட்சி எப்படி இருந்தது என்பதன் பின்னணியில் இப்போதைய வாக்குறுதிகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அடுத்ததாக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் பாஜகவின் அறிக்கையும் எப்படிப்பட்டவை என்று ஒப்பிட்டுப் ...
எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்? எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?

எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேசமயத்தில், வருமான வரித் துறையினரின் சோதனைகளும் பல இடங்களில் நடப்பதைப் பார்க்க முடிகிறது. பணம் கைப்பற்றப்படுகிறது என்கிற அளவில் அதுவும் பாராட்டத்தக்கதாகவே ...
ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள் ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்

ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு (விவிபாட்) இணைப்பு பொருத்துவதை 50% வாக்குச் சாவடிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், வாக்கு எண்ணிக்கை மேலும் 6 நாட்கள் தாமதமாகும் என்கிறது தேர்தல் ஆணையம். எனினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது அவ்வப்போது எழும் அவநம்பிக்கைகளை முழுமையாகக் களைய வேண்டும் என்றால் எதிர்வரும் காலங்களிலாவது இன்னும் கூடுதலான வாக்குச் ...