ஆரோக்கியம், இந்தியா, கட்டுரை, சுற்றுப்புறம், தமிழ்நாடு, விமர்சனம்

போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.

இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.  பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும்.  ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்கப்படுகையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நச்சுக் காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பனிமூட்டத்தால் ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. மேலும், இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சென்னையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை சாலையில் வைத்து தீயிட்டு கொளுத்தி வருவதால் சென்னை முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்படுகிறது.

எல்ல பத்திரிகைகளிலும் டிவிகளிலும் புகைமூட்டத்தால் மக்கள்படும் அவதிகள் தான் செய்தியாக இருக்கிறது.

சென்னையில் கடும் பனிமூட்டத்துடன் புகைமூட்டம் சூழ்ந்ததால், சென்னைக்‍கு வரவேண்டிய 40 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்‍கு திருப்பி விடப்பட்டன – ஆயிரக்‍கணக்‍கான பயணிகள் வெளியூர் செல்லமுடியாமல் தவிப்பு.

சென்னையில் கடும் பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சூழ்ந்ததால், விமானப் போக்‍குவரத்து கடுமையாகப் பாதிக்‍கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னையில் போகிப்பண்டிகை காரணமாக அதிகாலை முதல் கடுமையான புகைமூட்டம் நிலவியது. இதனால், விமான நிலையத்தில் ஓடுதளம் மூடப்பட்டது. சென்னைக்‍கு வரவேண்டிய மற்றும் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன. வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 40 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்‍கு திருப்பிவிடப்பட்டன. இதனால் ஆயிரக்‍கணக்‍கான பயணிகள் வெளியூர் செல்லமுடியாமல் தவித்தனர்.

மேலும் சென்னையில் உள்ள காற்றின் தர அளவுக்கு 600க்கும் அதிகமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன என்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் போகிப்பண்டிகையை கொண்டாடுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *