இந்தியா, சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்

காவிமயமாக்கப்படும் உச்ச நீதிமன்றம்.. அதிர்ச்சி தகவல்கள் …!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக மோடி அமித் சா கம்பெனிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றனர், நீதிபதிகள்.

கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது என நீதிபதிகள் கூட்டாக பேட்டியில் தெரிவித்தனர். முக்கிய விஷயங்களை நாட்டுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம்.

RSS பாஜக பரிவாரம் தீபக் மிஸ்ரா போன்ற நீதிபதிகள் மூலம் இந்திய பரிபாலனத்தை இந்திய Judiciaryயை இந்துத்துவாமயமாக்க விரும்புகிறார்கள்!

சனநாயக உணர்வு மிக்க நீதிபதிகள் சரியாக அம்பலப்படுத்தி உள்ளனர்.

தூக்கிலேற்றப்படும் நீதி:- உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி:

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நால்வரும் தெரிவித்த கருத்துக்கள் நீதித்துறையின் மீதும் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சிறிதளவு மக்களையும் திகைப்படையச் செய்துள்ளது.

அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் சாராம்சம்:

  • உச்சநீதிமன்ற நிர்வாகம் நீதமாக செயல்படவில்லை.
  • நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை.
  • முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கீடு செய்து விடுகிறார்.
  • நீதித்துறையில் ஜனநாயகம் இல்லை.
  • CBI சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா’வின் சந்தேக மரணம் பற்றிய வழக்கு விசாரணை

இது தான் அவர்கள் தெரிவித்த பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இது தொடர்பான சர்ச்சைகளை கொண்டு சென்றும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும்,  மொத்த நாட்டையும் பாதிக்கும் வகையில் நீதித்துறையின் செயல்பாடு இருப்பதாலேயே,  நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமே பிரச்சனையை தெரிவிப்பது என்று முடிவெடுத்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் என்றும் நீதிபதிகள் நால்வரும் மனம் வெதும்பி கூறியுள்ளனர்.

நீதியை நிலைநாட்ட கடைமைப்பட்ட நீதித்துறையிலேயே நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றால் இப்பெருங்கொடுமையை எங்கு போய் சொல்வது?

நீதிமன்ற விதிகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது ஒரு சொல் தான். அதற்குள் பல சம்பவங்கள் ஒளிந்திருக்கும், பல அதிகார வர்க்கத்தின் கைகள் அமிழ்ந்திருக்கும், மோடி, அமித்ஷா போன்றோரின் அதிகார திணிப்பு அரங்கேறியிருக்கும் என்பதை சிந்தனையுள்ள யாரும் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல வழக்குகளை எவ்வித ஆலோசனையுமின்றி தான் விரும்பிய அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி வழங்கினார் என்று அந் நீதிபதிகள் தெரிவித்த கருத்து ஒன்றே இதை புரிந்து கொள்ள போதுமான ஒன்றாகும்.

நீதிமன்றத்தின் செயல்பாட்டைப் பற்றி இவ்வளவு நாள் சாமானிய மக்கள் பேசிக் கொண்டிருந்த விவகாரம், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களின் நேரடி வாக்குமூலத்தின் வாயிலாகவே வெளி உலகுக்கு வந்துள்ளது என்பதையும் இவர்களின் குற்றச்சாட்டு வெட்ட வெளிச்ச்ம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்திய நீதித்துறை சட்டப்படி தீர்ப்பளிப்பதில்லை, தம் இஷ்டப்படி தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் நடுநிலையாளர்கள் பலரும் பல வருடங்களாக மக்கள் மன்றத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவர்களின் வாக்குமூலம் அமைந்துள்ளது.

யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின்பி ன்னணி என்ன?

“சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் ” என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார்.

1979 ல் வழக்கறிஞர் ஆக வாழ்க்கையை ஒடிசாவில் துவக்கி, மத்திய பிரதேசம், பீகார் என தலைமை நீதிபதி பொறுப்புகளை வகித்தவர். தீர்ப்புகளில் பண்டைய இலக்கியம், ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களை சொல்லி தீர்ப்பை வழங்கும் பக்திமான்.

1985 ல், “நான் ஒரு பிராமணன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு நிலமும் இல்லை ” என உறுதிமொழி கொடுத்து, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஓட்டியபொழுது, கட்டாக் மாவட்ட நீதிமன்றம் இவருடைய மோசடியை கண்டு பிடித்து ரத்து செய்த பின்னரும் நிலத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நீதிமான் ; 2012 CBI விசாரணை போதுதான் இந்த நில மோசடி அம்பலமானது.

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது.

பாஜக RSS பரிவாரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த
முக்கியமான தீர்ப்புகள், வழக்குகள் இவரது கையில் இருந்தது; இருக்கிறது.

Master of Roaster என்று எதேச்சதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் வழக்குகள் அனைத்தும், யாரிடம் போக வேண்டும் என முடிவு செய்கிறார். நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளை மிதிக்கிறார்.

CJI ஆக பதவி ஏற்ற பின், இவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான செல்லமேஸ்வர் , “உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க SIT ஒன்று அமைப்பது தேவையா ? “என்ற முக்கியமான வழக்கில் 2017 நவம்பரில் 5 பேர் கொண்ட அமர்வு அமைத்தார் ; அதை மறுத்து 3 பேர் கொண்ட அமர்வை அதிரடியாக அமைத்தார்.

1)மும்பை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கு விவகாரத்தில், அவரது இறுதியான கருணை மனுவை மிக அவசரமாக நள்ளிரவில் விசாரித்து “தூக்கில் போடச் சொன்ன நீதிமான் இவர் தான் ! ”

2)உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ள,அயோத்தி பாபர் மசூதி – ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் /அமர்வின் தலைவர் இவரே!

3)பாஜக தலைவர் அமித் சா நேரடியாக சம்பந்தப்பட்ட சோராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரித்து வந்த CBI நீதிபதி லோயா சந்தேகமான முறையில் இறந்தார். லோயா சந்தேக மரணத்தை விசாரிக்க கோரும் வழக்கில் அமித் சா பெயர் அடிபடுகிறது. இதில் அவரை பாதுகாக்க தலைமை நீதிபதி முயற்சிக்கிறார் என்பது மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு ஆகும்.

4) ஏர்செல் மேக்சிஸ் பேர வழக்கின் விசாரணையிலும், தந்திரமாக விலகி கொண்டார்.

இன்னும் ஏராளம், ஏராளம் செய்திகள் உள்ளன.

பாபர் மசூதி விவகாரத்தில் கட்டப்பஞ்சயாத்து தீர்ப்பை அளித்தார்கள் என்று நாடே நீதிமன்ற தீர்ப்பை காறி உமிழ்ந்தது. அத்தீர்ப்பின் மூலம் உலக அரங்கிலும் பெருத்த அவமானத்தை நீதிமன்றம் சம்பாதித்து கொண்டது

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவிற்கு தொடர்பிருந்ததற்கு எவ்வித ஆதாரங்களுமோ சாட்சியங்களுமோ இல்லாத நிலையில் இந்தியாவின் கூட்டு மனசாட்சி என்று கதைகட்டி அவரை தூக்கில் போட்டு இந்தியாவின் நீதியையும் தூக்கில் போட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான்.

இப்படி தொடர்ச்சியாக நீதித்துறைக்கே இழுக்கு ஏற்படுத்தும் செயலிலும் ஜனநாயக மாண்பை குழி தோண்டி புதைக்கும் வகையிலுமே நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன.

அதையே உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் அளித்த வாக்குமூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

நவீன ஹிட்லராக உருவெடுக்கும் மோடியையும் அவரது ஆட்சியின் அவலத்தையும் நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது.

மொத்தத்தில் நீதித்துறை, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது.

நாட்டை நாசப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நீதித்துறையின் செயல்பாட்டையும் அதற்கு அச்சாரமாக திகழும் பிரதமர் மோடியையும் நீதித்துறையின் மீதும் இந்திய இறையாண்மையின்மீது நம்பிக்கைகொண்டுள்ள மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இந்நிலை நீடித்தால் பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய நாட்டை காக்க மற்றுமொரு சுதந்திரப்போரை இந்திய நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார்கள் நம்நாட்டின்மீது அக்கறைகொண்டு மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *