சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக் கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட சிறுவணிகர்களுக்கு ”சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில் நவம்பர் 30-ம் தேதி வீசிய "ஃபெஞ்சல்" புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப் பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக சிறுவணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.