புதுடெல்லி: உலக வங்கி அதிக பொருளாதாரமாக மாறுதல் என்ற தலைப்பில் இந்தியாவிற்கான அறிக்கையில், 2000 மற்றும் 2024ம் ஆண்டு இடையில் இந்தியாவின் வேகமான வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.3 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் கடந்த கால சாதனைகள் அதன் எதிர்கால லட்சியங்களுக்கு அடித்தளத்தை வழங்குகின்றன.
இருப்பினும் 2047ம் ஆண்டுக்குள் உயர் வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறுவதற்கான லட்சிய இலக்கை அடைவதற்கு வழக்கம் போலான வணிக சூழ்நிலையில் சாத்தியமில்லை. 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறுவதற்கு அதன் தனிநபர் மொத்த தேசிய வருமானம் தற்போதையை நிலைகளை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகரிக்க வேண்டும்.
சில நாடுகள் அடைந்த சாதனை போல, வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அடுத்த இரண்டு தசாப்தங்களில் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.இந்த இலக்கை அடைவதற்கு குறைந்த சாதகமான வெளிப்புற சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை பராமரிப்பது மட்டுமல்லாமல், உண்மையில் சீர்திருந்தங்களை விரிவுபடுத்தவும், தீவிரப்படுத்தவும் வேண்டும்.
2047ம் ஆண்டுக்குள் அதிக வருமானத்தை அடைவதற்கு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வரும் தசாப்தங்களில் உண்மையான அடிப்படையில் சராசரியாக 7.8 சதவீதமாக இருக்க வேண்டும். ஒரு துரிதப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் தொகுப்பு மட்டுமே இந்தியாவை 2047ம் ஆண்டுக்குள் வருமானம் கொண்ட நாடாக உருவாக்குவதற்கான பாதையில் கொண்டு செல்லும்\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அதிக வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை: உலக வங்கி அறிக்கை appeared first on Dinakaran.