புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம் தொடங்கியுள்ளது. மேலும் அம்பேத்கரின் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அணிவகுப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்துவார்கள் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “அம்பேத்கரை எப்போதும் அவமதிக்கும் காங்கிரஸ் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்களை நடத்துகின்றது. இந்த நாடகத்தை நிறுத்துங்கள். பாசாங்குதனத்தை நிறுத்துங்கள். அம்பேத்கரின் வாழ்நாளில் மற்றும் அவரது மறைவுக்கு பின்னரும் அவரது மரபுக்கு செய்யப்பட்ட அனைத்து அவமானங்களுக்கும் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கட்டும். அதன் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்களை நடத்தட்டும்” என்றார்.
The post அமித் ஷாவுக்கு எதிராக பிரசாரம் நாடகம் ஆடுவதை நிறுத்துங்கள்: காங்.கை சாடிய பாஜ appeared first on Dinakaran.