டெல்லி: ஓமியோபதி மருந்து குறித்து சர்பத் ஜிகாத் என்று அவதூறாக விமர்சித்த யோகா மாஸ்டர் ராம்தேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹம்டாட் லேப் என்ற ஓமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ். இது லவ் ஜிகாத் போன்றது என்றும் பேசி தனது பதஞ்சலி நிறுவன சர்பத்திற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ள ராம்தேவ் அவதூறு பரப்பினார். ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
The post அவதூறு பேச்சு: யோகா மாஸ்டர் ராம்தேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.