மொடாசா: காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை தோற்கடிக்க முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக குஜராத் சென்றுள்ளார். ஆரவள்ளி மாவட்டத்தில் உள்ள மொடாசாவில் ராகுல்காந்தி காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக இருந்தது. இந்த மாநிலம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமான மாநிலமாகும். ஏறத்தாழ சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ ஆகியவற்றை தோற்கடிக்கும் பணியில் உறுதியாக இருக்கிறேன். நீண்டகாலமாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத குஜராத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மன சோர்வடைந்துள்ளனர். இது சித்தாந்தங்களின் போர், சித்தாந்தங்களை கொண்ட இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. ஒன்று பாஜ, மற்றொன்று காங்கிரஸ் கட்சியாகும். ஆனால் மாநிலத்தில் அவர்களை தோற்கடிப்போம். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தோற்கடிக்க முடியும்” என்றார்.
The post ஆர்எஸ்எஸ், பாஜவை தோற்கடிக்க காங்கிரசால் மட்டுமே முடியும்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.