டெல்லி: இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமேகன் தெரிவித்தார்
டெல்லியில் நேற்று தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும் ஆஸ்திரியாவின் டைமன்ட் விமான நிறுவனங்களின் கூட்டு அமைப்பான சக்தி விமான நிறுவனம் சார்பில் 200 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
பங்கேற்றபோது பேசிய ஒன்றிய அமைச்சர் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது 800-க்கும் அதிகமான உள்நாட்டு விமானங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 1,700 விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கையை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதனால், விமானபோக்குவரத்துத் துறை மிகப் பெரிய அளவில் விரிவடைய உள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் 6,000 முதல் 7,000 விமானிகள் மட்டுமே உள்ளன. எனவே, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தச் சூழலில், விமானப் பயிற்சிக்கான முனையாமாக இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, விமானப் போக்குவரத்துத் துறைக்கான ஒருங்கிணைந்து அணுகுமுறையை ஒன்றிய அமைச்சகம் வகுத்து வருகிறது. மேலும், 38 விமான பயிற்சி அமைப்புகளின் (எஃப்டிஓ) பல்வேறு அம்சங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதோடு, இந்த பயிற்சி அமைப்புகள் தரநிர்ணயமும் செய்யப்பட உள்ளன என்றார்.
The post இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவைப்படுவர்கள்: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் தகவல் appeared first on Dinakaran.