டெல்லி: இந்தியாவில் உள்ள லாரி ஓட்டுநர்களில் 55.1% பார்வை குறைபாடு இருப்பது ஐஐடி நிறுவனம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்லி ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில் 53.3 விழுக்காடு பேருக்கு தூரப்பார்வை பிரச்சை இருப்பதாகவும், 46.7 விழுக்காடினருக்கு கிட்டப்பார்வை பிரச்சை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 44.3 விழுக்காடு ஓட்டுநர்களின் உடல் எடை அதிகமாக இருகிறது. 57.4 விழுக்காடு பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்களிடம் இந்த ஆய்வு அறிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் உள்ள லாரி ஓட்டுநர்களில் 55.1% பார்வை குறைபாடு: டெல்லி ஐஐடி நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி appeared first on Dinakaran.