புதுடெல்லி: இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி, "ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் மட்டுமல்ல. ஒரு நாட்டில் ஐரோப்பிய ஆணையம் விரிவான ஈடுபாடு காட்டுவதும் இதுவே முதலாவதாகும்.