சென்னை: இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக்களம் என்றால் திமுக எப்போதும் முதன்மையாக நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக்களம் என்றால் திமுக எப்போதும் முதன்மையாக நிற்கும். இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? திமுக தொடங்கியது முதல் 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை, எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது.
முதல் மொழிப் போர்க்களத்தில் நாம் வெற்றி பெற்றாலும் போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல, இந்தி திணிப்பை முன்னே விட்டு சமஸ்கிருதமயமாக்கும் சதித்திட்டம். தமிழ் மண்ணை சமஸ்கிருதமயமாக்கும் சதித்திட்டத்துடன் தமிழ்ப் பண்பாட்டின் மீது நடத்த நினைக்கும் படையெடுப்பு இது. இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே கற்றுக்கொள்ளக் கூடாதா என்று கரிசனத்துடன் கேட்கிறார்கள்.
சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழிலேயே கோயில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மொழிதானே? தமிழில் அர்ச்சனை செய்யலாமே என்று கேட்டால் அவர்களின் உண்மையான நோக்கம், அடையாளம் அம்பலப்படும். இதனால்தான் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.
The post இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக்களம் என்றால் திமுக எப்போதும் முதன்மையாக நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.