‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஒரு மேஜிக்கல் படம் என்று நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முழுக்க காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.