உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 ரயில்வே அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் ரயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டுள்ளன.
இன்று காலை ஷுஜாத்பூர் மற்றும் ரசூலாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையில் நின்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயிலின் பின்புறத்தில் சரக்கு ரயில் மோதியது. காகா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஃபதேபூர் மாவட்டத்தில் அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இரண்டு ரயில்களின் பணியாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர்.
ஃபதேபூரில் ஒரு பெரிய ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு ஒரே பாதையில் வந்த இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் சரக்கு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டு பலத்த சேதம் அடைந்தது. ஓடும் சரக்கு ரயிலின் லோகோ பைலட் சிவப்பு சிக்னலை மீறியதால் விபத்து நடந்திருக்கலாம். தற்போது நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
The post உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து appeared first on Dinakaran.