டெல்லி: உலக செஸ் சாம்பியன் குகேஷ் பாரிஸ் ஒலிம்பிக்சில் இரட்டை பதக்கம் வென்ற மனுபாக்கர் உள்ளிட்டோருக்கு மேஜர் டயான் சந்த் கேல் ரத்னா விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இந்திய விளையாட்டுதுறையின் மிக உயரிய விருதாக மேஜர் டயான் சந்த் கேல் ரத்னா விருது கருதப்படுகிறது. 2024ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முகேஷுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கேல் ரத்னா விருதை வழங்கினார். இதை தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனுபாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பாரா பேட்மிட்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்தியஸ்ரீ சுமதி ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
The post உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!! appeared first on Dinakaran.