லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் மீது இரண்டு வழக்கறிஞர்கள் தீப்பிடிக்கும் ரசாயனம் மூலமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத் நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் வழக்கறிஞர் சசிபாலா வியாழனன்று காலை வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த சச்சின் குமார் மற்றும் அவரது உறவினர் நிதின் குமார் ஆகியோர் சசிபாலா மீது தீப்பிடிக்கும் ரசாயனத்தை வீசி எறிந்துள்ளனர்.
இதில் சசிபாலாவின் ஆடையில் தீப்பிடித்ததோடு உடலிலும் காயமேற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். ரசாயனத்தை வீசிய சச்சின் மற்றும் நிதின் ஆகிய இருவரும் உத்தரகாண்டின் உதம் சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் எதிராக சசிபாலா வழக்கு தொடர்ந்துள்ளதால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
The post உ.பி.யில் நீதிமன்ற வளாகத்தில் பெண் வக்கீல் மீது ஆசிட் வீசி தாக்குதல்: 2 ஆண் வழக்கறிஞர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.