இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் சுமார் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்தது உறுதியானதை அடுத்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இந்த தீர்ப்பை வழங்கினார். ஏற்கெனவே, இந்த வழக்கில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.