சென்னை: அதி கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல். இதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்றும், நாளையும் (நவ.30) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.