லக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு பணியாளர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காலத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க அத்தியாவசிய பணிகள் பாதுகாப்பு சட்டம்(எஸ்மா) கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் திடீரென தற்போது அத்தியாவசிய பணிகள் பாதுகாப்பு சட்டம்(எஸ்மா) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசின் அனைத்து துறைகள், மாநகராட்சி முதல் உள்ளாட்சி வரை பணியாற்றும் ஊழியர்கள், மாநில அரசு நிர்வாகத்தின்கீழ் வரும் அனைத்து பணியாளர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post எஸ்மா சட்டம் அமல் உ.பியில் அரசு ஊழியர்கள் 6 மாதம் போராட தடை: யோகி அரசு உத்தரவு appeared first on Dinakaran.