டெல்லி: எஸ்.பி.ஐ ரிவார்டு தருவதாகக் கூறி புதிய மோசடி நடப்பதாகத் இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது. எஸ்.பி.ஐ பரிசை பெற விரும்பினால் ஏ.பி.கே எனும் பைலை பதிவிறக்கம் செய்யுங்கள் என குறுந்தகவல் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி பேர்வழிகள் வங்கியிலிருந்து பணத்தை திருட அனுப்பும் செய்தி அது என இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஏ.பி.கே எனும் பைலை பதிவிறக்கம் செய்ததும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு நிதி பாதுகாப்பு சீர்குலைந்துவிடும் என பிஐவியின் உண்மை கண்டறியும் பிரிவு கூறியுள்ளது. இது போன்ற லிங்குகளை புறக்கணிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட சரியான இயங்குதள செயலிகள் வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ராய்டு இயங்குதளத்தில் செயலிகள், இயக்கங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும் ஏ.பி.கே முறையை இணைய குற்றவாளிகள் மோசடியாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
The post எஸ்.பி.ஐ ரிவார்டு தருவதாகக் கூறி புதிய மோசடி: இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.