டெல்லி: தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கிடையே ஏர்டாக்சி சேவையை செய்லபடுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். ராமேஸ்வரம் அயோத்திக்கு வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி.எம்.எம் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசுகையில்,
கனிமொழி சோமு எம்.பி
நாட்டிலேயே வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு மிக முக்கிய இடத்தில் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவம், சுற்றுலா, கல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை கோவையில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதேபோல் தூத்துக்குடியிலும் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க வேண்டும். திருச்சியில் அண்மையில் பரந்த நிலப்பரப்புடன் விமான நிலையம் திறக்கப்பட்டது. எனவே, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 2 மற்றும் 3-ஆம் கட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு ஏர் டாக்சி சேவையை தொடங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
எம்.பி.எம்.எம் அப்துல்லா
22613 / 22614 ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. ஆனால், அந்த ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. எனவே, புதுக்கோட்டை ரயில் நிலையத்தில். ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
The post ஏர்டாக்சி சேவையை செய்லபடுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி சோமு எம்.பி. appeared first on Dinakaran.